தையிட்டி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு
தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் திகதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது.
இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் இன்று 12 மணிக்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த பொலிஸார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு
குறித்த சட்டவிரோத தொடர்பாக பிரதேசசெயலகம் மற்றும் அரச திணைக்களங்களிடம் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் பொலிஸார் பல கோணங்களில் கேள்விகளை எழுப்பியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri