தலைதூக்கியுள்ள வன்முறைக் கலாசாரம்.. பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட கருத்து
நாட்டில் வன்முறைக் கலாசாரமொன்று தலைதூக்கியிருப்பதாக பரவும் கருத்துக்களில் எதுவித உண்மையும் இல்லை என்று பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் வன்முறைச் சம்பங்கள் குறித்த ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும், "முன்னைய காலங்களில் பாதாள உலகக்கும்பல்களின் செயற்பாடுகளுக்கு அரசியல் அனுசரணை தாராளமாகக் கிடைத்திருந்தது.

இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் : முகம் முழுவதும் காயங்கள்! உறவினர்களின் பகிரங்க வாக்குமூலம்
ஆட்சிமாற்றம்
ஆட்சிமாற்றத்துடன் அவர்களுக்கான அனுசரணை இல்லாமற் போனவுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டை விட்டும் தப்பித்துச் சென்று விட்டார்கள்.
தற்போதைக்கு அவர்கள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதையே ஒருசில அரசியல்வாதிகள் வன்முறைக்கலாசாரம் தலையெடுத்திருப்பதாக சோடிக்கமுனைகின்றனர்.
அவர்களுக்கு குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளதன் காரணமாக அவ்வாறு போலியான தகவல்களை பரப்புகின்றனர்.
எனினும் நாட்டில் அவ்வாறான வன்முறைக் கலாசாரம் ஏதும் தலையெடுக்கவில்லை” என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




