வடக்கு - கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும்..! அரசாங்கத்திடம் பகிரங்க கேள்வி
தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத்தராத, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கத்தால் வடக்கு, கிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) கேள்வியெழுப்பியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், தவராசா கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம்
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீது தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல்.
அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதற்கான செயற்பாட்டிற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
