தயாசிறிக்கு அரச சிறப்புரிமைகள் சிறந்தவை, ஆனால் அரசாங்கம் மோசமானது: சாகர காரியவசம்
தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்துக்கொண்டு, அரச உத்தியோகபூர்வ இல்லம், வாகனங்களை பயன்படுத்தியவாறு, அரசின் சகல சிறப்புரிமைகளை அனுபவித்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது பிரச்சினைக்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி - தான் பார்த்த மிகவும் மோசமான நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றம் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளாரே?.
பதில் - அதுதான் எனக்கும் அந்த பிரச்சினை தெளிவாக புரியவில்லை. அவர் கட்டடம் பற்றி கூறுகிறாரோ தெரியவில்லை. எவ்வித உரிய காரணத்தையும் கூறாது அவர் பேசியுள்ளார். எந்த அமைச்சரின் எப்படியான நடத்தை குறித்து அவருக்கு பிரச்சினை என்பதை அவர் கூற வேண்டும்.
எமக்கும் கடந்த காலங்களில் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை குறித்த பிரச்சினை இருந்தது. அவர் அரச உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்துக்கொண்டு, அரச வாகனங்களை பயன்படுத்திவாறு, அரசின் சகல சிறப்புரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு, அமைச்சராக பதவியை வகித்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக பேசி வருகிறார்.
அப்படியான இடங்களில் எமக்கும் பிரச்சினைகள் இருந்தன. தயாசிறி ஜயசேகர சம்பந்தப்பட்ட அமைச்சரின் செயற்பாடுகள் தொடர்பில் தமக்கு பிரச்சினை இருப்பதாக தெளிவாக கூற வேண்டும்.
இதனால், இப்படியான கருத்தை எவரும் வெளியிட முடியும். இவற்றை புத்திசாலித்தனமாக வெளியிடும் கருத்துக்கள் என கருத வேண்டிய அவசியமில்லை. அது கிராமத்தனமான கருத்து எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri