ராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளைய தினமே 35 ராஜாங்க அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டாலும் அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வர்த்தமானி
ராஜாங்க அமைச்சர்களுக்கான விடயதானங்கள் இம்முறை வர்த்தமானி மூலம் ஒதுக்கிக் கொடுக்கப்பட மாட்டாது.
அவர்கள் தங்கள் விடயதானம் தொடர்பான அமைச்சரவை அமைச்சரின் கீழ் செயற்பட அறிவுறுத்தப்படவுள்ளனர்.
அமைச்சரவை அமைச்சர்களுக்கான நியமனம் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கபினட் அமைச்சர்கள்

பொதுஜன பெரமுன கட்சியினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சில அமைச்சர்கள் தொடர்பில் சர்ச்சைகள் நிலவுவதன் காரணமாக அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் தற்போதைக்கு அமைச்சரவை அமைச்சர்களாக செயற்படுவோர் அதே அமைச்சுப் பதவிகளில் தொடரவுள்ள நிலையில், புதிதாக நியமிக்கப்படுவோருக்கு வேறுதுறைகள் ஒதுக்கிக் கொடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri