ரணிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் இராஜாங்க அமைச்சர் மஸ்தான்
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (12) அவர்கள் இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மக்களின் தீர்மானம்
இதற்கமைய, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, விசுவமடு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி வேட்ப்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க கோரி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஸ்தான்,
"குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் எமது பிரசார நடவடிக்கைகளுக்கு முன்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளனர்.
இத்தீர்மானத்தை நாட்டிற்காக ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் போன்ற பல விடயங்களை பொருட்படுத்தியே அவர்கள் எடுத்துள்ளார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri