வெலிக்கடை சிறைக்குள் பலவந்தமாக நுழைந்த இராஜாங்க அமைச்சர்?
இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், வெலிக்கடை சிறைக்குள், பலவந்தமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இராஜாங்க அமைச்சர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துச் சென்றதாகவும், அவரது நண்பர்கள் சிலர் சிறை அதிகாரிகளை தவறாக பேசியதாகவும் சிறைச்சாலை தரப்புகள் தெரிவித்தன.
ஒரு சிரேஷ்ட சிறை அதிகாரி, சம்பவம் நடந்ததை உறுதிசெய்தாலும், மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்று கூறிவிட்டார்.
இதற்கிடையில், சிறைச்சாலை முகாமை மற்றும் சிறை மறுவாழ்வு அமைச்சகத்தின் பேச்சாளரிடம் இது தொடர்பில், கொழும்பின் ஊடகம் ஒன்று கேட்டபோது,
“இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த, இந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. அத்துடன் அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.