அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்துகின்ற துண்டுபிரசுரங்கள் விநியோகம் (Photos)
இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்துகின்ற துண்டுபிரசுரம் விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது "அடக்குமுறை ஊடாக தேசிய கொள்கைகளை அழித்து அக்கிரமத்தில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்துக்கு தலை வணங்கவும்" என எழுதிய பதாகை ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று மாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பிரதமகுருவை சந்தித்து தங்களுடைய நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்தி ஆலய குருக்களுக்கும் தங்களுடைய துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கூழாமுறிப்பு பங்குதந்தை அவர்களை சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் அவரிடமும் தங்களுடைய நிலைப்பாடுகளை தெரிவித்து துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
முள்ளியவளை தண்ணீரூற்று நகர்ப்பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,
“இந்த நிலைமைகளுக்கு காரணமான இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் விலகி நல்லதொரு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஊழலற்ற ஒரு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை ஜனநாயக முறைப்படி உருவாக்குவதற்கு அனைத்து தரப்பினரும் உடன்பட்டு அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
