தடுப்பூசியின் மூன்றாவது அளவை பூஸ்டராக பயன்படுத்துவது அவசியம்!
இலங்கையில் ஒரு பூஸ்டர்(மூன்றாவது) தடுப்பூசியை செலுத்தினால், அது நோய் பரவுவதை நிறுத்தும் அல்லது குறைக்கும் மற்றும் மேலும் பிறழ்வைத் தடுக்கும். அத்துடன் பிறழ்வு மாறுபாடு தடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இன்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் மூன்றாவது அளவை பூஸ்டராகப் பயன்படுத்துவது அவசியம் என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மக்கள் தொகைக்குள் ஒரு வைரஸ் தீவிரமாக பரவி, அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் போது, மூன்றாவது தடுப்பூசிக்கு குறைந்தபட்சம் 15 மில்லியன் தடுப்பூசிகள் தேவை என்று சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
12-18 வயதினருக்கான தடுப்பூசியை செலுத்துவதும் இந்த நேரத்தில் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் வலியுத்தியுள்ளது.
கோவிட் பரவுவதைக் குறைப்பதற்காகவும், எதிர்கால நலன் கருதி, தடுப்பூசியின் மூன்றாவது அளவு என்ற கருத்து உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தொழில்நுட்ப ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசி வகை மூலம் பூஸ்டர் தடுப்பூசியைக் கண்டறிந்து திட்டமிட வேண்டியது அவசியமாகும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசி வகைகளுடன் கோவிட்க்கான தடுப்பூசியின் அதிகரித்த அளவுகளை செலுத்த பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்த நாடுகளில் உள்ளடக்கியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
