கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
அரச பேருந்து சேவையாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தனியார் பேருந்து சேவையினருடனான முரண்பாடு காரணமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பேருந்துக்களை நிறுத்தி அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு இடையில் 3 நாட்களாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று முழங்காவில் பகுதிக்கான அரச பேருந்து சேவையை இடைநிறுத்தி கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பிரச்னைக்கான தீர்வு வழங்கப்படாதவிடத்து, எதிர்வரும் 4ஆம் திகதிக்கு பின்னர் கிளிநொச்சி சாலையிலிருந்து வேவைகளை இடைநிறுத்தி தொடர் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில், அக்கராயன், ஜெயபுரம் ஊடாக முழங்காவில் பகுதிக்கான சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam