மட்டக்களப்பில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விழிப்புணர்வு கூட்டம்
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாகவும் , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் பணிப்புரைக்கும் , மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்கவும் மட்டக்களப்பு மேற்கு வலயத்திலுள்ள பாடசாலைகளில் பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் கொரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை மட்டக்களப்பு மேற்கு வலயப் பாடசாலைகளில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் 11ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரை இவ்வலயப் பாடசாலைகளில் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவளையாறு கைலன் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் இரா. நடேசபதி தலைமையிலும் , கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயத்தில் அதிபர் நாகமணி ஜெயராணி தலையிலும், மரப்பாலம் அ.த.க பாடசாலையில் அதிபர் பரமேஸ்வரி விஜயசசிகாந் தலைமையிலும் , கரடியனாறு மகாவித்தியாலயத்தில் அதிபர் ஆர். செந்தில்நாதன் தலைமையிலும் குறித்த பாடசாலைகளில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இக் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு இடம் பெற்ற இவ்விழிப்புணர்வுக் கூட்டங்களில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். மனோகரன் கலந்துகொண்டு வருகை தந்தோருக்குச் சுகாதார நடைமுறைகள் பற்றி விளக்கமளித்துள்ளார்.
இதன் போது கல்வித்திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் போன்றோரும் பிரசன்னமாயிருந்தனர்.
சுகாதார நடவடிக்கைகளை மக்களிடமும், மாணவர் மத்தியிலும் கொண்டு சென்று பாடசாலையைத் தொடர்ந்து நடாத்துவதற்கு நாம் அர்ப்பணிப்பைச் செய்வோம் எனப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம். மனோகரன் தெரிவித்துள்ளார்.





குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam