வவுனியாவில் இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர் வேலாயுதம் நல்லநாதர் ஆர்.ஆர் நினைவாக இலவச குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்றுமுன் தினம் (23.03.2024) இடம்பெற்றுள்ளது.
இலவச குடிநீர் திட்டம்
வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் குறித்த இலவச குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தாகசாந்தி நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், க.சிவனேசன், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம், மற்றும் கழகத்தின் முக்கிஸ்தர்கள், அன்னாரது உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.