ஸ்டார்மரின் உக்ரைன் மீதான நகர்வுகள்..! ட்ரம்ப் தரப்பில் எழுந்துள்ள கடுமையான விமர்சனம்
அமெரிக்காவின், மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர், ஸ்டீவ் விட்கோஃப், உக்ரைன் பற்றிய பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதன்போது, கெய்ர் ஸ்டார்மர், சர்ச்சில் போன்று நடந்து கொள்கிறார் என குறிப்பிட்ட அவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மிக புத்திசாலி என புகழ்ந்துள்ளார்.
மேலும் அவர், இறுதிவரை போரிடுவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியை அடைய வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா முன்வைக்கும் கருத்துகளை அவர் நம்புவதாகவே குறிப்பிட்டுள்ளார்.
புடினின் விருப்பம்
அத்துடன், உக்ரைனில் புடின் விரும்பியதை ஏற்கனவே பெற்றுவிட்டார் என்றும் ஸ்டீவ் விட்கோஃப், உறுதியாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஐரோப்பா முழுவதும் கைப்பற்ற புடின் விரும்புவது விபரீதமான முடிவு என்று தாம் கருதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமக்கு அப்படி ஒரு கனவு இருப்பதாக புடின் ஏற்கனவே குறிப்பிட்டார்.
ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் உருவாக்கவும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோவை வெளியேற்ற விரும்புவதாகவும் புடின் கூறினார்.
இது ஒருபுறமிருக்க, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு உக்ரைன் மீது ஏன் இந்த அக்கறை என்றும் ஸ்டீவ் விட்கோஃப், கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் மீது புடினுக்கு என்ன திட்டம் இருந்ததோ அதை அவர் சாதித்து விட்டார். இனி ரஷ்யா இந்த பிராந்தியங்கள் மீது அதிகாரம் செலுத்தும் என அவர் அழுத்தமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

மர்மமான முறையில் இறந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர் News Lankasri
