அடுத்த வருடம் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம்: இரா.சாணக்கியன் (Video)
எதிர்வரும் வருடத்திலே ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுகாதாரத்துறையை சேர்ந்த முக்கிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பெரியகல்லாறு இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று(30.12.2023) இடம்பெற்ற இரத்ததான முகாமில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் தீர்வு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்துக்கொண்டிருப்பதுதான் அரசியல் தீர்வினை அடையும் திட்டம் என கருதுவார்களானால் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்.
சுகாதாரத் துறையை பொறுத்தவரையில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. எங்களுடைய சுகாதாரத் துறையை பொறுத்த அளவில் இந்த வைத்திய நிபுணர்களுடைய இடமாற்றங்கள் தொடர்பான சில குறைபாடுகளை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையினுடைய அபிவிருத்தி சங்கம் என்னிடம் தந்திருக்கின்றார்கள்.நிர்வாகத்தினரும் தந்திருக்கின்றார்கள்.
அதேபோலத்தான் வைத்தியர்களின் பற்றாக்குறை களுவாஞ்சிகுடியில் மாத்திரமல்ல இலங்கை முழுவதும் பாரிய குறைபாடாக இருக்கின்றது.
தொழிற்சங்க பிரதிநிதிகள்
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்திய அதிகாரிகள் இல்லாமல் போனதற்கான காரணம் இந்த மாவட்டத்தில் இருக்கும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதாவது இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததற்கு காரணம் கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு கொடுத்த வரிச்சலுகைகள். அதாவது கூடுதலான வசதி உள்ளவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் கோடிக்கணக்கான இலாபம் உழைக்கின்றவர்களுக்கும் வரி சலுகைகளை வழங்கினார்கள்.
இவை அனைத்திற்கும் ஆதரவாக வாக்களித்தவர்களில் எமது மாவட்டத்திலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
வரவு செலவு திட்டம்
இன்று நாட்டிலே சுகாதாரத்துறை முழுமையாக இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் வரவு செலவு திட்டமே என அண்மையில் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
நாங்கள் அந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து தான் வாக்களித்தோம். ஏனென்றால் நமக்குத் தெரியும் நாடு வங்குரோத்து நிலையை அடையப்போகின்றது.
வைத்திய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியே செல்ல போகின்றார்கள். வைத்திய அதிகாரிகள் இந்த நாட்டை விட்டு போனால் குறிப்பாக வடக்கு கிழக்கு இருக்கின்ற வைத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக எங்களுடைய கிராமிய வைத்தியசாலைகளான துறைநீலாவனை, பெரிய கல்லாறு, களுதாவளை, செட்டிபாளையம், மகிளூர், பழுகாமம், மண்டூர், மகிழடித்தீவு போன்ற இந்த பிரதேசம் அதே போன்று தான் நமது கல்குடா பிரதேசத்திலும் ஆரம்ப சிகிச்சை பிரிவுகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்பது முன்கூட்டியே தெரியும் அதனால் தான் அந்த தவறான கொள்கையை நாங்கள் எதிர்த்து இருந்தோம்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
