நாட்டின் பல்வேறு பகுதியில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்ற மக்கள்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்ளும் அவல நிலைக்கு தள்ளபட்டுள்ளனர். மேலும் சிலருக்கு அவ்வாறு காத்திருந்தும் எரிபொருள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலையிலும் உள்ளனர்.
இத்தட்டுபாட்டினால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியதை தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு மூன்று உயிர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அவல நிலையாவது,
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் நகரில் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்யும் இடத்தில் நேற்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு கொள்கலன் களஞ்சியசாலைக்கு முன்பாக வெற்று எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்திருந்துள்ளனர்.
இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணி நேரம் காத்திருந்த போதும் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமே எரிவாயு கொள்கலன் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு :
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகியவற்றினைப் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டிய நிலையுள்ளதுடன் தொடர்ச்சியாக எரிவாயு மற்றும் டீசல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக டீசல் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் குறித்த எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் நின்று எரிபொருளைப்பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதேநேரம் இன்று காலை மட்டக்களப்பு நகரின் பயனியர் வீதியில் எரிபொருள் விநியோகம் நடவடிக்கை நடைபெறும் மக்களுக்கு கிடைத்த அநாமதேய தகவல்கள் காரணமாக பெருமளவான மக்கள் அப்பகுதியில் கூடியதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. குறித்த வீதியில் முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காஸ் சிலிண்டருடன் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் நின்ற நிலையில் எரிவாயு விநியோகம் நடைபெறாத காரணத்தினால் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
நாளை மறுதினம் குறித்த பகுதியில் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படும் என மாவட்ட எரிவாயு விநியோகஸ்தர் எமக்கு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிவாயு இல்லாத காரணத்தினால் பல உணவகங்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை;
திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் திருகோணமலை நகரில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகஸ்தரின் களஞ்சியசாலையிலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட வெற்று சிலிண்டர்களுடன் நடுவீதியில் இன்று (22) அதிகாலை ஒரு மணி முதல் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்
இந்நிலையில் குறித்த வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் ஒரு தொகுதி திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்புவதாகவும் மிகுதி இருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் உணவகங்களுக்கு ஒதுக்கியதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் அவ்வாறு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதுமானதாக இல்லை எனவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்
இவ்வாறு இருக்கையில் இன்றைய தினம் வருகைதரும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்குவதாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு திருகோணமலை விநியோகஸ்தர் தெரிவித்தார்.
இருப்பினும் இன்று அதிகாலை ஒரு மணி முதல் வயோதிபர்கள்,பெண்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் நீண்ட வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வீதியில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
