இலங்கையின் செயற்பாடு தொடர்பில் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடிதம் எழுதி உள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் (M. K. Stalin) கடிதம் ஒன்றை எழுதியுள்ள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 11 ஆம் திகதி அன்று நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்க சென்ற 23 மீனவர்கள், 13 ஆம் திகதி அன்று, பாரம்பரிய மீன்பிடித்தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். பின்னர் காரைநகர் கடற்படை தளத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட கால பிரச்சினையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, உறுதியான வழிமுறைகளை காண வேண்டுமென்றும், தமிழக முதல்வர் தனது கடிதத்தின் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam