தி.மு.க வின் எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் பத்து வருடங்களின் பின்னர் பல தொகுதிகளைக் கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் அபார வெற்றியை பெற்று முன்னணி வகிக்கின்றது.
இந்நிலையில்,தி.மு.கவின் தலைவர் ஸ்டாலின் தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது கோவிட் காலமாக இருப்பதால் செவ்வாய்கிழமையன்று அண்ணா அறிவாலயத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அன்றைய தினம் பதவியேற்புக்கான தேதி முடிவு செய்யப்படும் என்றும் ,பதவியேற்பு விழா எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடைபெறும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகிய நிலையில், திமுக கூட்டணி கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது
கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் தனது வெற்றிச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டதுடன்,அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வெற்றிச்சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
