புலனாய்வாளர்களின் கெடுபிடிக்கு மத்தியில் சென் பீற்றர்ஸ் படுகொலையின் 30வது ஆண்டு நினைவேந்தல்!
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன.
அஞ்சலி
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 135ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நினைவேந்தலின்போது புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
