கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை
மனுக்குலத்தின் பாவங்களைப் போக்க, கடவுள் மனுவுருவெடுத்து சிலுவை மரணம் ஏற்றார்.
அவர் நமக்காக ஏற்ற சிலுவைப் பாதை, மனுக்குல மீட்புப் பாதையாக அமைந்தது.
இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூறும் முகமாக கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தால் 28ஆவது வருடமாக ஒழுங்கு செய்யும் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை - 2024 இம்மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 3.15 மணிக்கு, கொழும்பு புதிய செட்டி வீதியில் அமைந்துள்ள புனித வியாகுல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி புனித வேளாங்கண்ணி ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம் வழியாக கொட்டாஞ்சேனை புனித லூசியஸ் பேராலயத்தை வந்தடையும்.
புனித லூசியஸ் பேராலயத்தின் வளாகத்தில் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு எண்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இத் திறந்தவெளி பெரிய சிலுவை பாதையில் கலந்து கொண்டு இத்தவக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளுங்கள்!
ஊடக அனுசரணை - லங்காசிறி ஊடக வலையமைப்பு