கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருடாந்த திருவிழா - LIVE
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191ஆவது வருட வருடாந்த திருவிழா இன்றையதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இன்றையதினம் திருவிழா தினத்திற்கான சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன.
இன்று காலை 4 மணி முதல் திருப்பலிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணிவரை அடுத்தடுத்து திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இருந்து வருகைத் தந்த பெருமளவான பக்தர்களோடு இன்று மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் இடம்பெறவுள்ளது.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து, நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெறும்.



