தமிழர்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் செயற்படும் படையினர்: சிறீதரன் காட்டம் (Video)
தமிழ் மக்களுடைய நிம்மதியை குலைக்கும் வகையில் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு படைகளும் செயற்படுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே மிக முக்கிய முக்கியமாக ஒரு மக்கள் சமூகம் நிம்மதியாக வாழ நினைக்கிறது.
அவ்வாறான அந்த சமூகத்தினுடைய நிம்மதியை குலைக்கும் வகையில், அல்லது அவர்கள் இடையில் இருக்கின்ற ஒற்றுமையை மற்றும் நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு படைகளும் செயற்படுகின்றன.
ஓய்வு பெற்ற இராணுவ தளபதியொருவர் தமிழ் மக்களுடைய வணக்க நிகழ்வுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேநேரம் அதனை கருப்பொருளாக வைத்துக் கொண்டு பொலிஸார் இந்த தடை உத்தரவுகளை மேற்கொள்ள முனைகிறார்கள்.
இந்த நாட்டிலே நிம்மதி வேண்டுமென்றால், இந்த நாட்டிலே மக்கள் வாழ வேண்டும் என்றால் ஒற்றுமையும் வளமும் இருக்க வேண்டுமென்றால் இவற்றை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



