தமது அரசியல் இலக்கு குறித்து சிறீதரன் எம்.பி வெளியிட்ட கருத்து
ஈழத்தமிழினத்தின் இறைமையே எமது அரசியல் இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மக்களினதும், வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினதும் ஏற்பாட்டில் பிரித்தானியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியல் நீரோட்டத்தில், இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியற் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன்.
உறுதியான நிலைப்பாடு
எனது அரசியற் பயணத்தையும், அதுசார்ந்த பணிகளையும் அதே தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
அதனால், இறுதிவரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்.
அந்த அடிப்படையிலேயே, காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் நான் உறுதியாக உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன்: மத்திய செயற்குழு கூட்டமும் ரத்து என்கிறார் சுமந்திரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |