ஸ்டாலின், சீமான், கமல் ஆகியோருக்கு நாடாளுமன்றில் சிறீதரன் வாழ்த்து
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் திகதி சட்டசபை தேர்தல் நடைபெற்றிருந்தது.
அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக எட்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலச் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகியிருந்தன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்கால இருப்பிற்கான வழிகளில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சட்டசபை தேர்தலில் சீமான், கமலஹாசன் ஆகியோர் தோல்வியை சந்தித்திருந்தாலும் வெற்றியின் விளிம்பு வரை சென்றிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
