சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள்.. இ.சிறிநாத் எம்பி
அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவைச் சேர்ந்த அருணன் தமிழீழனின் முள்ளியில் தொலைந்த முகவரிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு, நூல் அறிமுகவுரையினை, நயவுரையினை அன்பழகன் குரூஸ் நிகழ்த்தியதுடன் நூலாசிரியர் அறிமுகத்தினை கலைவேந்தன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூலாசிரியரின் பெற்றோர் மற்றும் நூலாசிரியர் உள்ளிட்டோரால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தொடர்ந்து நூலாசிரியால் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகளுக்கு கவிதை நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினரால் கன்னிக் கவிஞர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநாத், போர்வலி சுமந்த மண்ணின் மனதை கவிதைகளால் வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் தமிழீழன்.
