சீனாவின் பிடிக்குள் அதி முக்கிய இடங்கள்! இலங்கையை மீட்டெடுக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பலத்தை நிரூபிக்கும் தளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக ஜேவிபி தொிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு தளம், 13 ஏக்கர்களை கொண்டு சேவைகள் நிலையம் மற்றும் போட்டிசிட்டி ஆகியன அதிமுக்கிய இடங்கள் சீனாவின் பிடிக்குள் இருப்பதாக ஜேவிபியின் தலைவா் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளாா்.
ஜேவிபியின் 32 வது காா்த்திகை வீரா்கள் தின நிகழ்வில் உரையாற்றிய அவா், இன்று வீசா இல்லாத பயணியைப் போன்ற சீனக் கப்பல், இலங்கையில் இருந்து செல்லாமல், இலங்கையின் கடற்பகுதியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் அரசாங்கத்தின் அமைச்சரவை, அமைச்சா்கள் வெளியில் வந்து அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சுமத்துகின்றனா்.
எனினும் இதனைக் கருத்திற்கொள்ளாமல், அரசாங்கம் குடும்ப அதிகாரத்தைக்கொண்டு செயற்படுவதாக அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளாா்
எனினும் இன்று இலங்கையில் இருப்பது ஜனநாயக்க நிா்வாகம் அல்ல. குடும்ப நிர்வாகமாகும்.
எனவே இன்று சிறந்த ஒரு நிா்வாகத்தை அமைக்கவேண்டிய அவசியம் உள்ளது.
சிலர் இந்தப்பிரச்சனைக்கு நாடுகளை மாற்றினால் தீா்வுக்கிடைக்கும் என்று நம்புகின்றனா். எனினும் அது உாிய தீா்வு இல்லை என்று அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா்
இந்த நாடு அபிவிருத்தியை முன்கொண்டு செல்லவேண்டிய நாடு என்ற வகையில், பொதுமக்கள் இயக்கத்தை அமைக்கவேண்டியுள்ளது.
இந்த புதிய இயக்கத்தை அமைப்பதற்காக அனைவரும் அழைப்பு விடுப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அதுவே இன்று நாட்டை மீட்கும் ஒரே மாா்க்கமாகும் என்றும் அவா் தொிவித்துள்ளாா்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
