பிரித்தானிய உள்ளுராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் வெற்றி! குவியும் பாராட்டுக்கள்
பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.

இவர் தனது வெற்றி குறித்து தெரிவிக்கையில்,
Sherborne St John மற்றும் Rooksdown பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும், Basingstoke மற்றும் Deane நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri