ஆப்கானிஸ்தான் வாழ் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை
ஆப்கானிஸ்தான் வாழ் இலங்கையர்களை தாய் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கையர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கான இலங்கைத் தூதரகம் தற்பொழுது ஹோட்டல் ஒன்றில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கும் 43 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நேட்டோ போன்ற நிறுவனங்களில் இந்த இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
