இந்தியாவில் உயிரிழந்த இலங்கை தமிழ்ப்பெண்! வெளியான காரணம்
இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் சென்னையில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷோபனா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வரும் நிலையில்,தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
வெளியான காரணம்
இந்நிலையில், குறித்த பெண் தனது தம்பியை இரு சக்கர வண்டியில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை மதுரவாயில் அருகே எதிரே வந்த வேனுடன் இருசக்கர வாகன கைப்பிடி மீது உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இதன்போது, பின்னால் மணல் ஏற்றி வந்த லொறி மோதி ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விபத்தினை ஏற்படுத்திய வேன் மற்றும் லொறி ஓட்டுனர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து ஷோபனாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்து கொண்டிருப்பதால் இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
