சவூதி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானம் அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி புறப்பட்ட விமானம் இரண்டு மணித்தியாலங்கள் வானில் பறந்ததன் பின்னர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் மீளவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் ஹைட்ரோலிக் கட்டமைப்பு செயலிழந்த காரணத்தினால் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்டுச் சென்று இரண்டு மணித்தியாலங்கள் மற்றும் பத்து நிமிடங்களின் பின்னர், மீண்டும் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல்.146 ரக விமானமே இவ்வாறு இயந்திரக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விமானத்திலர் 146 பயணிகளும், 11 பணியாளர்களுமாக மொத்தம் 157 பேர் பயணித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்ட விமானம், மீண்டும் இரவு 7.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்தவர்களை வேறும் விமானம் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




