குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட சட்டத்தரணி! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2023 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு பதிவேட்டிலிருந்து இரண்டு பக்கங்களைக் கிழித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்ன குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, வஞ்சகம் மற்றும் முறைகேடு செய்ததற்காக உயர் நீதிமன்றம் இன்று அவரை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டது.
குற்றவாளி
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோருடன் இணைந்து தீர்ப்பை வழங்கினார்.
சட்டத்தரணி தர்மசிறி கருணாரத்னவின் நடவடிக்கைகள் சட்டத் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக பிரதம நீதியரசர் தமது தீர்ப்பில் கூறினார்.
அத்துடன், குறித்த வழக்கு பதிவேட்டை பார்வையிட அவர் ஒரு தவறான பெயரையும் வழங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து அவரை உடனடியாக நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
