அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த இளைஞர் சடலமாக மீட்பு! பொதுமக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் கரையோரப் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
18-25 க்கு இடைப்பட்ட வயதுடைய குறித்த இளைஞர், இலங்கை பின்னணியை கொண்டவர் எனவும் நம்பப்படுகின்றது.
இதனையடுத்து அவரை அடையாளம் காணும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
இந்த மரணத்துக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருப்பு ஜீன்ஸ், பச்சை நிற t-shirt மற்றும் கருப்பு puffer jacket ஆகியவற்றை இவர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இளைஞர் வேறொரு இடத்தில் தண்ணீரில் விழுந்திருக்கலாம் எனவும், அவரது உடல் பின்னர் Tranmere Point பகுதியை வந்தடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
குறித்த இளைஞர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 131 444 என்ற எண்ணில் ESCAD 168-21052023 என்ற குறிப்பு எண்ணுடன் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam