இலங்கையில் தொடரும் கிரிக்கெட் சர்ச்சை: வழக்கில் இருந்து விலகிய நீதிபதிகள்
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தடை வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14.11.2023) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரியவருகையில், கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணை இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நியாயமற்ற முறையில் விமர்சனம்
இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இவ் வழக்கை விசாரிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்

விளையாட்டுத்துறை அமைச்சர் சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மற்றொரு நீதிபதி தம்மிக கணேபொல தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கிலிருந்து விலககுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam