தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்: விமானிகள் மீது குற்றச்சாட்டு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகளை அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒருவர் நோய்வாய்ப்பட்டால் திட்டமிட்டபடி சேவையை முன்னெடுப்பதற்கு ஏனையவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் (22.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, ஒரு விமானி நோய்வாய்ப்பட்டவேளை 20 விமானிகள் பணியில் ஈடுபடக்கூடிய நிலையிலிருந்தனர்.
சாதகமாக பதிலளிக்கவில்லை
ஆனால் அன்று அவர்கள் அனைவரும் பணிக்கு சமூகமளிக்கவில்லை நான் ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு பயணிகள் அவதியுறுகின்றனர் விமானத்தை செலுத்துங்கள் எனகேட்டேன்.
ஆனால் அவர்கள் எவரும் சாதகமாக பதிலளிக்கவில்லை. சக விமானி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விமானத்தை செலுத்த முன்வரவில்லை.
விமானிகளும் ஒத்துழைக்கவில்லை
கசப்பான உண்மை என்னவென்றால் கடந்தகாலங்களில் நாட்டுக்காகவும் ஸ்ரீலங்கன் எயார் எயர்லைன்சிற்காகவும் உத்தியோகத்தர்கள் இக்கட்டான நிலைமைகளில் ஒத்துழைத்தார்கள்.
ஆனால் நான் தொடர்புகொண்டவேளை 20 விமானிகளும் ஒத்துழைக்கவில்லை.
இவ்வாறான நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஸ்ரீலங்கன் எயர்லைன்சை மறுசீரமைக்கவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20.06.2023 அன்று தென்கொரிய தொழில் வாய்ப்பிற்காக இளைஞர்களை ஏற்றிச்செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 470 நேற்று சுமார் 12 மணி நேரம் தாமதமாகியுள்ளது.
இதனால் கொரிய தொழில் வாய்ப்பிற்காக பணியாளர்களை அனுப்புவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 9 மணி நேரம் முன்

சிரிப்பால் மட்டுமே மக்களை கவர்ந்த காமெடி நடிகர் குமரிமுத்து...கல்லறையில் இப்படியா எழுதியிருக்கு? Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri
