நைரோபிக்கு அதிமுக்கியஸ்தர்களை அழைத்துச்செல்லவுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏப்ரல் 29 ஆம் திகதி நைரோபிக்கு அதிமுக்கியஸ்தர்களை அழைத்துச்செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
முழுமை அனுசரணையுடன் கென்யாவில் ஒரு வாரக்காலம் தங்கியிருக்கும் வகையில் இந்த விமானப்பயணம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ, தமது ஊழியர்களை பணி நீக்கம் செய்து, நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பயணம் தி;ட்டமிடப்பட்டுள்ளது.
பயணத்தின் இணையவுள்ள அதிகாரி ஒருவர் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார் .
கொழும்புக்கும் நைரோபிக்கும் இடையில் நேரடி விமானச்சேவையை தொடங்கும் வகையில் கொழும்பிலிருந்து நைரோபிக்கு விமானம் ஒன்று ஏப்ரல் 22 ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது எனினும் அது ஏப்ரல் 29 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பயணத்தில் வர்த்தகர்கள், செய்தியாளர்கள்; உட்பட்டவர்கள் அடங்குவார் இவர்கள் அனைவரும் மேலீன் குழுமத்தின் நிர்வாக இயக்குநரான ருவன்; பெர்னாண்டோவுக்கு சொந்தமான தொலைபேசி எண்ணில் இருந்து அழைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் குறித்த அதிமுக்கிய விருந்தினர்களின் விமான பயணத்திற்காக
மெய்லீன் குழுமம் இலங்கை ஏர்லைன்ஸ_க்கு பணம் செலுத்துமா என்பது இன்னும்
தெளிவாகத் தெரியவில்லை.
எனினும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா ஏரலைன்ஸ் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
