நைரோபிக்கு செல்லும் பயணத்தில் அதிமுக்கியஸ்தர்கள் எவரும் செல்லமாட்டார்கள் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவிப்பு
எதிர்வரும் வியாழக்கிழமை 29ஆம் திகதி நைரோபிக்கு செல்லும் பயணத்தில் அதிமுக்கியஸ்தர்கள் எவரும் செல்லமாட்டார்கள் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் நைரோபிக்கும் இடையில் நேரடி வானூர்திச்சேவையை ஆரம்பிக்கும் முகமாக நைரோபிக்கு செல்லும் முதல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கையின் அதிமுக்கியஸ்தர்கள் உட்பட ஊடவியலாளர்கள் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அது யார் யார் என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இது தொடர்பில் தகவல் எதனையும் முன்னதாக வெளியிட்டிருக்கவில்லை. தற்போது இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் புதிய வானூர்தி சேவையை ஆரம்பிக்கும் முகமாக வானூர்தி ஒன்று நைரோபிக்கு செல்லவுள்ளதை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் அதில் அதிமுக்கியஸ்தர்கள் எவரும் செல்லவில்லை என்று வானூர்திச்சேவை தெரிவித்துள்ளது. எனினும் குறித்த வானூர்தியில் ஊடகவியலாளர்கள் செல்வதை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், நைரோபியில் உள்ள வர்த்தகர்கள் இதற்கான செலவுகளை பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எத்தனை ஊடகவியலாளர்கள் இதில் பயணிப்பர் என்பது தொடர்பில்
வானூர்திச்சேவை தகவல் எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
