இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான “மாஸ்டர் செஃப்" சமையல் போட்டியில் இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தைப்பெற்றுள்ளார்.
இவர் போட்டி முழுவதும் இலங்கை உணவுகளை தயாரித்து வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை போன்ற உள்ளூர் மசாலாக்களை மிக துல்லியமாக சேர்ந்திருந்தமை சிறப்பம்சமாகும்.
இலங்கையில் பிறந்த சவிந்திரி பெரேரா, தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து தொழில் ரீதியாக வங்கி ஆலோசகராக பணிபுரிந்து வருகின்றார்.
நடுவர்களின் தெரிவு
சிறுவயது முதலே இலங்கை உணவு தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா போட்டியில் சாவிந்திரி கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அஸ்திரேலியா முழுவதிலுமிருந்து பங்குப்பற்றிய போட்டியாளர்களில், அவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையின் அடிப்படையில் 50 பேரை நடுவர் குழு அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்துள்ளனர்.
இதன்போது அரையிறுதிச் சுற்றில் பங்குப்பற்றிய 50 போட்டியாளர்களில், 24 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில், மூவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், சவிந்திரி பெரேரா, MasterChef Australia 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த வெற்றிக்குப் பிறகு, நேற்று இரவு சவிந்திரி பெரேரா நாடு திரும்பியிருந்ததுடன், அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |