மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் நாட்களில் நாட்டில் பல பகுதிகளில் சீரான காலநிலையே தொடரும் என இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளி ஏற்படும் அபாயம்
அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் குறைவாக உள்ளதாகவும் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam