வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வடக்கு வங்கக் கடலைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் நாளை (29) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த கடற்பரப்புகளில் மிக பலத்த காற்றுடன் (மணித்தியாலத்துக்கு 70-80 கி.மீ.) கனமழை பெய்யக்கூடும் என்றும், அந்த கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடற்றொழில் நடவடிக்கை
இதன் காரணமாக வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் நெடு நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (29) பிற்பகல் 3:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (29) பிற்பகல் 3:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam