செல்கள் செயலிழக்கும் அபாயம்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
ஆகவே, வயது முதிர்ந்த ஒருவரின் உடல் செயற்பாட்டிற்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லீட்டர் தண்ணீர் தேவை என்று கூறப்படுகின்றது.
இவ்வாறு நீர் கிடைக்காத பட்சத்தில் நீரிழப்புக்கு ஆளாகி உடலில் செல்கள் செயலிழந்துவிடும் என்றும், எனவே தேவையான அளவில் நீரை பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்றில் ஏற்பட்ட மோசமான காலநிலை
மேலும், வரலாற்றில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருந்த வெப்பநிலையை விட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக உள்ளது.
எனவே, கடும் வெப்பமான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதன்படி, நீரிழப்பைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாடு முழுவதும் மழையற்ற காலநிலை மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
