இலங்கையில் வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 241 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தனிநபர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை உள்ளடக்கிய இந்த இறக்குமதி செலவினம், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 182 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு மாதத்தில் சுமார் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாகன இறக்குமதி செலவு
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒட்டுமொத்த செலவு 1,495 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்துள்ளது.
மேலும், மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இறக்குமதி செலவு 19.6 சதவீதம் அதிகரித்து, 2,251 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான மொத்த செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.