பாடசாலை மாணவர்களிடத்தில் அதிகரிக்கும் கோவிட் தொற்று
வவுனியா வடக்கு வலய பாடசாலை ஒன்றில் 10 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட மறவன்குளம் பாரதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 5 மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவனுக்கு நேற்று (12.11) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த மாணவனுடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களுக்கு இன்று (13.11) துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் அப் பாடசாலையைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் 7 பேருக்கும், தரம் 11 மாணவர்கள் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான மாணவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
