வவுனியா மாவட்டத்தில் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள்
வவுனியா தெற்கு வலயத்தின் நிர்வாக கிளை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா தெற்கு வலயத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் நிர்வாக கிளையில் பணியாற்றும் நான்கு உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொற்றாளர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வவுனியா
தெற்கு வலயத்தின் நிர்வாக கிளை தற்காலிகமாக மூடப்பட்டு அதன் செயற்பாடுகள்
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
