இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உயரதிகாரி
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இலங்கைக்கு வந்துள்ளாா்.
உள்ளூர் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே, இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங்,(Kelly Keiderling) இலங்கைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவா், இலங்கையின் அதிகாரிகள் மற்றும் சிந்தனைத் தலைவர்களைச் சந்தித்து, கூட்டாண்மை மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெல்லி கெய்டர்லிங், (Kelly Keiderling) தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகார பணியகத்தின் பொது இராஜதந்திரம் மற்றும் பங்களாதேஷ், பூட்டான், மாலதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான துணை உதவி செயலாளராக செயற்படுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.



