இலங்கையில் தொடரும் விபத்துக்கள்! ஐவர் பரிதாபமாக மரணம்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து வீதி விபத்துக்களில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டி – நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கிதலவ பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐவர் பரிதாபமாக மரணம்
எல்ல – வெல்லவாய வீதியின் அம்வத்த பகுதியில் நாய் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பெரியமுகத்துவாரம் பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் பட்டுகெதர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூணில் மோதியதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் இரத்தினபுரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெல்லவாய – தனமல்வில வீதியில் தெளுல்ல கொலனி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வானின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
இதேவுளை, யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லைக்கும் யாழ்.பீச் விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று பிற்பகல் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி திருமகள் சோதி பஸ் தரிப்பிட ஒழுங்கையைச் சேர்ந்த
கோபாலகிருஸ்ணன் கவிதாண்சன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)