அபார வெற்றியை நோக்கிப்பயணிக்கும் இலங்கை அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் உள்ளது.
நியூசிலாந்து அணியின் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தினால் தொடர் வெற்றியை கைப்பற்றிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை ஐந்து விக்கட்டுகளை மட்டும் இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு ஆட்டை நிறுத்திக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து ஃபொலொ ஒன் முறையில் மீண்டுத் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணித் தலைவர், நியூசிலாந்தை பணித்தார்.
சாதனை
இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து அணி இதுவரையில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய எஞ்சியிருக்கும் ஐந்து விக்கட்டுகளையும் வீழ்த்தினால் 128 ஆண்டு பழமையான சாதனையை சமன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிலைநாட்ட முடியும்.
1896ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லோமன் என்ற வீரர் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
