கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல்!
தமிழ் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று மாலை முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக முக்கியஸ்தரொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்த ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும், தற்போதைய நாட்டின் சூழ்நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முக்கிய தீர்மானம்
மேலும் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு காணும் அடிப்படையில் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு ஒன்றுக்கூடி முக்கிய தீர்மானமொன்றினை எடுக்கும் முயற்சியாக இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
