மாணவர்களை மோசமான முறையில் நடத்திய அதிபர் - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
மாத்தறை - திக்வெல்ல வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 10 மாணவர்களை மேசையில் சிதறிக்கிடந்த உணவை நாக்கில் சுத்தப்படுத்துமாறு வழங்கிய தண்டனை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர், மதிய உணவின் பின்னர் மாணவர்கள் மேசைகளில் சிதறும் உணவினை சுத்தம் செய்யாமல் இருப்பின் மறக்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று மாணவர்களை சில காலமாக எச்சரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், உணவு சாப்பிட்ட பின்னர் மேசையில் விழுந்த சோறு பருக்கைளை மாணவர்களின் நாக்கினால் சுத்தப்படுத்துமாறு வழங்கிய தண்டனை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிபரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்திருந்தார்.
பெற்றோர்கள் வெளியிட்ட தகவல்
குறித்த அதிபர் மாணவர்களுக்கு கொடுத்த தண்டனையை மற்றுமொரு மாணவன் கைப்பேசி மூலம் காணொளி எடுத்து, பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதற்கமைய, சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பில் தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என வட்டார கல்வி அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அதிபரை சிக்கலில் தள்ளும் நோக்கில் மாணவர்கள் இதனை பதிவு செய்துள்ளதாக பாடசாலையுடன் தொடர்புடைய பெற்றோர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
