பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள்!
காலி - வந்துரம்ப பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை கொடூரமாக தாக்கி மாணவனின் காதை வெட்டிய 5 பாடசாலை மாணவர்களை நாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதே பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகொட, போவிட்டியமுல்ல சந்தியில் நேற்று காயமடைந்த மாணவர் மீது மற்றுமொரு மாணவ குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம்
தனிப்பட்ட தகராறு காரணமாக இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவனின் காதையும் வெட்டியுள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான மாணவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அருகில் உள்ள காட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் சிலர் மாணவனை மீட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மாணவ குழுவை கிராம மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
