அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 308 ரூபா...! வெளியான தகவல்
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் அந்நியச் செலாவணி பரிமாற்ற மத்திய நிலையங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததாலேயே இந்த நிலையங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன. தம்மிடமுள்ள டொலர்களை ரூபாவாக மாற்றுவதற்கு பலர் முனைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை பரிவர்த்தனை செய்வோருக்கு கொள்வனவு விலை 308 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உண்டியல் மற்றும் களவாக நாட்டிற்குள் டொலரைக் கொண்டு வந்தவர்களே இவ்வாறு குறைந்த விலைக்கு டொலரை விற்க முயன்றதாக தெரியவருகிறது. எனினும் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
