கொழும்பில் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்! 75 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கையில் இன்று படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் படையினர் உட்பட 75 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் இன்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் அதிகாரியும் படுகாயமடைந்துள்ளார்.இதற்கிடையில், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே இன்று காலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது காயமடைந்த 42 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை
தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.